புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மறைந்த ஏகாம்பரத்தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இதனை ஒட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான மறைந்த ஏகாம்பரத்தின் நினைவு தினம் முதலியார் பேட்டையில் இன்று அனுசரிக்கப்பட்டது.
அவரது குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலியார் பேட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஏகாம்பரத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து அவரது குடும்பத்தாரும் ஏகாம்பரத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் மகன் லட்சுமி நாராயணன் என்கிற லெனின் மனைவி அமிர்தவள்ளி மகள் லட்சுமி பிரியா மருமகன் சிவ சந்தோஷ் உள்ளிட்ட குடும்பத்தார் உறவினர்கள் முக்கிய நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.