புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் சுதானா நகரில் 40.82 லட்சம் ரூபாய் செலவில் சாலை மறுசீரமைப்பு பணியை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தொடங்கி வைத்தார்
பொதுப்பணித்துறை நகர குடிநீர் பிரிவு உட்கோட்டம் பொது சுகாதாரக் கோட்டம் சார்பில் புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் விடுபட்ட பகுதிகளான மக்கள் நகர், சுதானா நகர் விரிவு – 1, 11 ஆகிய பகுதிகளுக்கு 40.82 லட்சம் ரூபாய் செலவில் சாலையை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை விழா ராமணர் வீதி அம்மன் மீது சந்திப்பில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார் இவ்விழாவின் போது தலைமைப்பொறியாளர் .வீரசெல்வம் பொதுசுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் கெஜலட்சுமி உதவிப்பொறியாளர்.சுந்தரி அ இளநிலைப் பொறியாளர்கள் தணிகைவேல் மற்றும் தேவிபாரதி உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும்முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.