புதுச்சேரி அரசு, பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குநரகம் சார்பில் புள்ளி விவர வெளியீடான “புதுச்சேரி ஒரு பார்வை 2024” எனும் தொகுப்புக் கையேட்டினை, முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். R, பொதுப்பணித்துறை அமைச்சர் க. இலட்சுமிநாராயணன், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் P.R.N. திருமுருகன், அரசுச் செயலர் (பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்) S.D. சுந்தரேசன், இ.ஆ.ப., புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் P. பிரகாஷ்பாபு, புதுவைப் பல்கலைக்கழக இயக்குநர் (கல்வி) க. தரணிக்கரசு, துறை இயக்குநர் ரத்னகோஷ் கிஷோர் சௌரே ஆகியோர் கையேட்டினைப் பெற்றுக் கொண்டனர்.

“புதுச்சேரி ஒரு பார்வை 2024” எனும் இந்த கையேட்டில், புதுச்சேரி மாநிலத்தின் சமூக-பொருளாதார குறியீடுகள் மற்றும் வளர்ச்சி சாதனைகள் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய நிறைவான மற்றும் கருக்கமான புள்ளிவிவரங்கள் அடங்கியுள்ளன. மேலும், மக்கள் தொகை, பொருளாதாரம், வேளாண்மை, தொழில்துறை, சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூகநலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஒப்பீட்டளவில் தொகுக்கப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளன. மேலும், திட்டமிடல், முடிவெடுத்தல் மற்றும் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக கண்காணிக்க இந்த கையேடு உதவுகிறது.

இப்பதிப்பில் சமீபத்திய தகவல்களும், வளர்ச்சிப்போக்குகளைக் காட்டும் ஒப்பீட்டு புள்ளிவிவரங்களும் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரி மாநிலத்தின் சமூக- பொருளாதார நிலையைப்பற்றிய வெளிப்படைத்தன்மை, தகவலறிதல் மற்றும் பொது விழிப்புணர்வு ஆகிவற்றை மேம்படுத்தும் வகையில் இக்கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பதிப்பு அச்சுப்பதிப்பிலும் மற்றும் மின்னணு வடிவத்திலும் கிடைக்கும். மின்னணு பதிப்பை புதுச்சேரி அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர
இயக்குநரகத்தின் https://statistics.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *