ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ அரியநாயகி எனும் பிடாரியம்மன் ஆலய சித்திரை பெருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று இரவு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த சித்திரை மாதம் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கிய இவ்விழா சித்திரை 24-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.இவ்விழாவில் நேற்று மாலை சக்தி கரகம் புறப்பட்டு வீதியுலா வந்து காப்பு கட்டிய பக்தர்கள், சக்தி கரகத்துடன் தீக்குண்டம் அருகே வந்தனர்
அதன்பிறகு ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ காத்தவராய சுவாமி புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து தீ குண்டம் அருகே வந்தவுடன் தீக்குண்டம் கலைக்கப்பட்டு முதலில் காத்த காத்தவராய சுவாமி மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் தீக்குண்டத்தை சுற்றி வந்தவுடன் சக்தி கரகம் சுற்றி வந்து இறங்கியது. அதன் பிறகு பக்தர்கள் ஒவ்வொருவராக தீ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதன் பின்னர் சக்தி கரகம் நடனத்துடன் ஆலயத்தை அடைந்தது, ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ காத்தவராய சுவாமி ஆலயத்தை அடைந்தவுடன் மஹா தீபாராதனை காண்பிக்க பட்டு பக்தர்களுக்கு விபூதி குங்கும பிரசாதங்களும், அன்னதானப் பிரசாதங்களும் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து இன்று திருவிளக்கு பூஜை வைபவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இவ்விழா ஏற்பாட்டினை அரசவனங்காடு கிராமவாசிகள் மற்றும் இளைஞர்கள் பக்த கோடிகள் சார்பாக வெகு விமர்சையாக நடத்தினர்.