பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம் …..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது கோடை காலத்தில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாபநாசம் கோபுராஜபுரம் பெருமாங்குடி ,அரையபுரம் ராஜகிரி, பண்டாரவாடை, கோவில்தேவராயன்பேட்டை, மேல செம்மங்குடி, பொன்மான்மேய்ந்தநல்லூர் ,தேவராயன்பேட்டை உள்ளிட்ட 11 கிராமங்களில் பருத்தி சாகுபடி பணிகளைவிவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.
பருத்தி சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயி சங்கர் கூறியதாவது …
பருத்தி சாகுபடி பொருத்த அளவில் இந்த வருடம் சூப்பர் காட் ரகப்பருத்தியை சாகுபடி செய்து அதிக மகசூல் பெறுவதாகவும்,மேலும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இந்த வகையான பருத்தியை சாகுபடி செய்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பருத்தி சாகுபடி விவசாயிகள் பெறலாம் எனவும்,மேலும் கோடை பயிரான பருத்தி சாகுபடி 150 நாட்களில் அறுவடை செய்யலாம் எனவும்,மேலும் பருத்தி விளைச்சல் உயரத்திற்கு மாறாக ஒரு மீட்டர் அளவில் பயிரிடப்பட்டு பராமரித்து வந்தால் 6அடிக்கு மேல் பருத்தி நன்கு வளர்ந்து அதிக மகசூல் பெறலாம் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு நல்ல மகசூல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பருத்தி சாகுபடி செய்வதாக தெரிவித்தார்.
மேலும் இந்த பருத்தி சாகுபடியை செய்து பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொள்முதல் செய்தால் குவிண்டாலுக்கு அதிக விலை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.