உலக செவிலியர் தினத்தையொட்டி வந்தவாசியில் செவிலியரை கௌரவிக்கும் விதமாக எக்ஸ்னோரா கிளை இயக்குநர் ரயில்வே சு.தனசேகரன் தலைமையில் ஆர்ஜி மார்டன் சமுதாய கல்லூரியில் பயிலும் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் க.வாசு, கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக, எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் பங்கேற்று செவிலியர்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்த நிகழ்வில் எக்ஸ்னோரா கிளை விவசாய அணி இயக்குனர் ரயில்வே சு.தனசேகரன் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு, அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் கூறி சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பா.சீனிவாசன், வந்தை குமரன் ஆகியோர் கவிதை வாசித்தனர். கல்லூரியின் மைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியில் சமூக ஆர்வலர் வந்தை பிரகாஷ் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.