முத்தியால்பேட்டை தொகுதியில் பொது தேர்வில் 50 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் பரிசுகள் வழங்க உள்ள நிலையில் அதற்கான அறிவிப்பை நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார்
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகள் அனைவருக்கும் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா.சரவணன் விரைவில் பரிசுகள் வழங்க உள்ளார். முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு பரிசையும் வழங்க உள்ளார்.
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், ஸ்கூட்டி, லேப்டாப், சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர், குக்கர், ஸ்கூல் பேக், அயர்ன் பாக்ஸ், ஸ்மார்ட் வாட்ச், ரெயின் கோட் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்குவதாக அறிவித்துள்ளார்.அதன்படி முத்தியால்பேட்டை தொகுதியை சார்ந்த மாணவ- மாணவிகள், முத்தியால்பேட்டை முன்னாள் எம்எல்ஏ நந்தா.சரவணன் திமுக அலுவலகத்தில் முதல் உங்கள் விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை முத்தியால்பேட்டை திமுக தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ நந்தா சரவணன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சவரிராஜன்,அவை தலைவர் எழிலன், தொகுதி துணை செயலாளர் ரவி, தொகுதி பிரதிநிதி தனசேகர், மதன் பாபு, பூபதி, பிரகாஷ், பாபு பாஸ்கர், ரகுபதி, பாஸ்கர், சந்துரு, சண்முகம், ஜீவா உமாபதி உதயகுமார், வேணு, மற்றும் தொகுதி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.