தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை….
கேலோ இந்தியா சார்பாக தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் பீகாரில் கடந்த மே ஐந்து முதல் 9 ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து தேர்வு பெற்ற முப்பதிற்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை லீசார்டிலியர் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் நீச்சல் சங்க வீராங்கனை ரோஷினி 200மீ ஐம் பிரிவில் தங்கபதக்கம் வென்றார்.மேலும் தமிழ்நாடு அணிக்காக,
தீக்க்ஷா சிவகுமார்,தயனிதா,ஸ்ரீநிதிநடேசன் இவர்களுடன் சேர்ந்து 4×100மீ ப்ரிஸ்டைல் ரிலேயில் வெண்கலபதக்கமும், மரியாவின்ஷியா,பிரிக்ஷிதா,ஸ்ரீநிதி நடேசன் இவர்களுடன் 4×100 ஐம் ரிலேயில் வெண்கல பதக்கமும் வென்றார்.
வெற்றிபெற்ற நீச்சல் வீராங்கனையை தமிழ்நாடு மாநி நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின்ஆரோக்கியராஜ்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன்,மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விளையாட்டு விடுதி நீச்சல் பயிற்சியாளர் சதீஷ்குமார் மற்றும் நீச்சல் வீரர்கள்,பெற்றோர்கள் பாராட்டினர்.