பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கிராம மக்களுடன் இணைந்து பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கொள்ளிடம் கரையோர பகுதியில் திருவைக்காவூர், மன்னிக்கரையூர், வாழ்க்கை, மேலமாஞ்சேரி, கீழமாஞ்சேரி, நடுப்படுகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். கொள்ளிடத்தில் வெள்ளம் மற்றும் மழை, புயல் ஏற்படும் காலங்களில், எடக்குடி கிராமத்தில் அமைந்திருக்கும் மணல் திட்டில் தங்கி இருப்பது வழக்கம்.
இந்நிலையில் எடக்குடியில் சுமார் 15-ஏக்கரில் மணல் திட்டு ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள மணலை மண் என அதிகாரிகள் அனுமதி வழங்கியதை தொடர்ந்து பொக்லீன் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினசாமி தலைமையிலும் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான துரை.சண்முகபிரபு முன்னிலையிலும் ஏராளமான அதிமுகவினர் கிராம மக்களுடன் இணைந்து பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கனிம வளத்தை அழிக்காதே கிராம மக்களை காப்பாற்று என வாசகம் அச்சிடப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் இளமதி சுப்பிரமணியன் மாவட்ட அவை தலைவர் ராம்குமார் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முகமது இப்ராகிம் மாவட்ட பொருளாளர் கண்ணபிரான் ஒன்றிய செயலாளர்கள் கோபிநாதன்,சூரிய நாராயணன், ராமச்சந்திரன் நகர செயலாளர்கள் சின்னையன், கோவிந்தசாமி ரங்கராஜன் முன்னாள் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் பாஸ்கர் அவைத்தலைவர் நடராஜன் சபேசன் ஒன்றிய துணை செயலாளர் திலகவதி கணேசன் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கண்ணன் பொருளாளர் செல்வம் மாவட்ட பிரதிநிதி சின்னப்பா ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் ஜெகநாதன் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணைத் தலைவர் சின்னையன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து பொன்னுசாமி மாரிமுத்து ஜெய்சங்கர் பாண்டியன் அதிமுக நிர்வாகிகள் சதீஷ் சுப்பு அறிவழகன் டி கே ராஜா கிருஷ்ணசாமி உட்பட அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் தொடர்ந்து மணல் அள்ளும் பட்சத்தில் அதிமுக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.