திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆவூர் , அவளிவநல்லூர், ஆலங்குடி, அரித்துவார மங்கலம் ஆகிய நான்கு இடங்களில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவூர் அவளிவ நல்லூர் ஆகிய இடங்களில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன் தல தலைமையில், அவைத் தலைவர் பரமசிவம் துணை செயலாளர்கள் சுப்பிரமணியன், மேகலா ஜெய்சங்கர், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆவூர் அன்பு பிரபு, மாவட்ட பிரதிநிதிகள் கல்யாணம், சுப்பிரமணியன், வீரபாண்டியன், வலங்கைமான் பேரூர் செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித் தமிழ்மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆலங்குடி அரித்துவாரமங்கலம் ஆகிய இடங்களில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி தலைமையில், ஆலங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மோகன், பொதுக்குழு உறுப்பினர் பிரிதிவி ராஜன், அவைத் தலைவர் கேசவன், ஒன்றிய பொருளாளர் நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர்கள் கோபால், ஞானசேகரன், அமுதா தமிழரசன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், பாஸ்கர், கரிகாலன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வரதராஜன் உள்ளிட்ட கட்சியினர்,

பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்திற்கான ஊதிய நிலுவை தொகையினை தமிழகத்திற்கு கடந்த நாலு மாத காலமாக வழங்காமல் இருந்து வருவதால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு வழங்காமல் இருந்து வரும் நிலுவை தொகை ரூபாய் 4 ஆயிரத்து 34கோடி தொகையினை உடனடியாக வழங்கிட கோரியும், ஒன்றிய அரசை கண்டித்தும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான 100 நாள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *