கரூர் செய்தியாளர் மரியான்பாபு


கரூரில் புதிய தீயணைப்பு பயிற்சி மையத்தில் 141வது தீயணைப்போர் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 600 மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த நான்கு மாதங்களாக பயிற்சி துவங்கப்படாத நிலையில், உடனடியாக பயிற்சி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தமிழகத்தில் தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பத்தூர், கரூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் தற்காலிக பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட கரூரில் வேட்டமங்கலம் கேம்பிரிட்ஜ் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள தற்காலிக தீயணைப்பு பயிற்சி மையத்தில் 97 தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று மாத பயிற்சி துவங்கியது.
திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் க.குமார் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்பொழுது, பேசிய அவர் பயிற்சி பெறும் தீயணைப்பு வீரர்களுக்கு நீச்சல் பயிற்சி மூச்சுப் பயிற்சி மற்றும் தீயணைப்பு கருவிகளை கையாளுவது குறித்து அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அடிப்படை பயிற்சி முடிந்து தேர்வு நடத்தப்பட்டு நிலையங்களில் பணியமர்த்தப்படுவார்கள் மேலும் பயிற்சி காலத்தின் போது, ஒழுக்கம் , கண்ணியம் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் பயிற்சி மையத்தில் இருந்து யாரும் வெளியே செல்லக்கூடாது.

99.99% விடுப்பு கிடையாது செல்போன்களை அவசியம் கருதினால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் பயிற்சி காலத்தில் உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம் உடல்நல குறைவு ஏற்பட்டால் பயிற்சி காலம் நீட்டிக்கப்படும் அல்லது பயிற்சி மையத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல் உதவி அலுவலர்கள் கோமதி மற்றும் திருமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 90 நாட்களுக்கு 35 தீயணைப்பு பயிற்சியாளர்கள் பயிற்சியினை வழங்க உள்ளனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *