தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே பண்ணை வீட்டில் ஆடு திருடியவர் கைது!..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கவுண்டச்சிவலசு கிராமம் சத்திரம் தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 57) விவசாயி இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துச் சாலையில் பட்டி அமைத்து 20 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று பழனிச்சாமியின் மனைவி மட்டும் வீட்டில் இருந்தார்.
அப்போது ஆடுகனின் சத்தம் கெட்டு வெளியே வந்து பார்த்தபோது ஒரு வெள்ளாட்டை மட்டும் காணவில்லை. அக்கம் பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் வந்து வெள்ளாட்டை திருடி சென்றது தெரியவந்தது.
இதன மதிப்பு ரூ. 10 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து அலங்கியம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்யும் உடுமலை தாலுகா வேலாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சங்கர் (40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் வெள்ளாட்டை திருடியது சங்கர் தான் என தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.