வில்லியனூர் சங்கர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கிய NSS பயிற்சி முகாமில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சுகந்தி அவர்கள் தலைமையில் Nss திட்ட அலுவலர் திரு. பாரதிதாசன் செய்திருந்தார்,

இதில் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சரிடெபுள் சொசைட்டி தன்னார்வளர்கள் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்கள் தலைமையில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்க பனைமரத்தின் பங்கு பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு பற்றி சரோஜா சாரிடபிள் சொசைட்டி ஸ்டீபன் ராயப்பா அவர்களும் மாணவர்களுக்கு இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு திரு, வண்டி முத்து அவர்களும் எடுத்துரைத்தார், மாணவர்களுக்கு பனை ஓலையில் பூக்கள், மற்றும் பல அலங்காரப் பொருட்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது, பயிற்சியினை கைவினை பயிற்சியாளர் திருமதி மேரி அவர்கள் வழங்கினார்கள் NSS மாணவர்கள் 100 பேர் பங்குபெற்றனர்.