புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதி முத்துப்பிள்ளை பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுசீருடை வழங்கிய சமுகசேவைகி மு. லாவண்யா…
புதுச்சேரி மாநிலம் உழவர்கரை சட்டமன்றத் தொகுதி அன்னை தெரேசா பவுண்டேஷன் சேர்மேனும் புதுச்சேரி சரண் அறக்கட்டளை நிறுவனருமான
சமுக சேவைகி மு. லாவண்யா ஏற்பாட்டில் அவரது தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலையில் முத்துப்பிள்ளை பாளையம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கினார்.
பள்ளியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் விளையாட்டு சீருடை வழங்கினார் அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்பும் வழங்கினார்.
உழவர்கரை சட்டமன்ற தொகுதியில் சமூக சேவகியாக பல்வேறு பணிகளை செய்து வரும் திருமதி லாவண்யா தற்போது அரசு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விளையாட்டு சீருடை வழங்கி மகிழ்ச்சி
அடைந்துள்ளார்.
மேலும் முத்துப்பிள்ளை பாளையத்தைச் சேர்ந்த ராஜி, பிரசாந்த் இவர்களின் ஏற்பாட்டில் இவ்விழா சிறப்பாக நடந்தது. இவ்விழாவின் போது பிச்ச வீரன் பேட்டை சேர்ந்த முருகன், ஐயப்பன், செல்வமணி, வேலு, அன்பழகன், குமார், சரளா, அமலா, லூர்து, அருள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய பெருமக்கள் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.