வக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம், சட்டத்தை ஏற்க மாட்டோம், பள்ளிவாசல் கபர்ஸ்தான் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம், வக்பு சட்டத்தை திரும்ப பெறு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை தெற்கு, வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை கலெக்டர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் வரவேற்புரையும், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல்ஹமீது தொகுப்புரையும் நிகழ்த்தினர்.
கட்சியின் மாநில மாவட்ட, தொகுதி, நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தெற்கு மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் அபுதாஹிர், வடக்கு மாவட்ட செயலாளர் சீனி சிக்கந்தர் ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினர்.
வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் மாநில பேச்சாளர் பிலால்தீன் கண்டன உரை நிகழ்த்தினார்.இறுதியாக வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் பக்ருதீன் நன்றி கூறினார்.