நாகப்பட்டினத்தில் வருகின்ற 15,16,17 ஆகிய மூன்று தினங்களில் நடைபெறும் விவசாய சங்க 30 வது மாநாட்டில், வலங்கைமான் ஒன்றியத்தில் இருந்து 2000 விவசாயிகள் கலந்து கொள்வது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் கட்சி ஒன்றிய குழு, விவசாய சங்க ஒன்றிய குழு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழு, இளைஞர் பெருமன்ற ஒன்றிய குழு, மாதர் சங்க ஒன்றிய குழு, மாணவர் பெருமன்ற குழு, கலை இலக்கிய பெருமன்ற ஒன்றிய குழு, கலை இலக்கிய பெருமன்ற ஒன்றிய குழு கொண்ட கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி.சின்ன ராசா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலைகளை குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் பாஸ்கர் பேசினார்.
நாகப்பட்டினத்தில் எதிர்வரும் 15,16,17 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறும் விவசாய சங்க 30-வது மாநாடு சிறப்பு அம்சங்கள் குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு.ராஜா, கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் பேசினார்கள். 2000 விவசாயிகளை மாநாட்டில் பங்கு கொள்வது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் பேசினார். கூட்டத்தில் 100 நாள் வேலை செய்து 5 மாதங்கள் ஆகியும் ஊதியம் வழங்கப்படவில்லை, உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும். தற்போது பருவம் தவறி பெய்த மழையின் காரணத்தால் சேதமுற்ற நெல், பயிறு, கடலை, உளுந்து, பருத்தி உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய தலைவர் கலியபெருமாள், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் மற்றும் பட்டம் தட்சிணாமூர்த்தி, மருதையன், கலியமூர்த்தி, கண்ணையன், ராதா மற்றும் கிளை செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கு பெற்றார்கள்.