கோவை உக்கடம் பகுதியில் SDPI கட்சியினர் வக்ஃபு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் மெழுகுவத்தி ஏந்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு திருத்த சட்டம் முஸ்லிம்களை வஞ்சிக்கும் செயல் முஸ்லிம்களின் உரிமையை நசுக்கும் இது போன்ற கடுமையான சட்டங்களை ஆளும் மத்திய அரசு தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக சிறுபான்மையினுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறது.

இதனை மிகவும் கண்டிக்கின்ற வகையில் நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தும்

அதன் ஒரு பகுதியாக இன்று இரவு எட்டு மணி அளவில் கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி எதிரில் மெழுகு வர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட தலைவர் முகமது இஷாக் தலைமை
மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரஹீம் வரவேற்புடன் துவங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார்
மாநில பேச்சாளர் அபுதாஹிர் மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீத் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் இப்ராகிம் பாதுஷா மாவட்டத் துணைத் தலைவர் சிவக்குமார் மாவட்ட செயலாளர்கள் உமர் ஷரீஃப் அபுதாஹிர் அனீப்கான்
காமிலா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்பிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன் அவர்கள் கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில் எதிர்க்கட்சிகளின் குரல்களை நசுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்ப்பு திருத்த சட்டம் முஸ்லிம்களை வஞ்சிக்கும் செயல் முஸ்லிம்களின் உரிமையை நசுக்கும் இது போன்ற கடுமையான சட்டங்களை ஆளும் ஒன்றிய அரசு தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக சிறுபான்மையினுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறது இதனை மிகவும் கண்டிக்கின்ற வகையில்நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தும்அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் இந்த மெழுகு வர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தொடர்ச்சியாக இந்த சட்டம் வாபஸ் பெறவில்லை என்றால் சி.எ.ஏ சட்டம் போன்று மக்களை திரட்டி சாஹின்பாக்குகல் உருவாக வாய்ப்பு உள்ளது அதை SDPI கட்சி முன்னின்று நடத்தும் என்று கூறினார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் காதர் முகமது இக்பால் பிளாஸ்டிக் அப்பாஸ் வர்த்தக அணி மாவட்ட தலைவர் சையது இப்ராஹிம் மாவட்ட செயலாளர் அப்பாஸ் தொழிற்சங்க மாவட்ட தலைவர் சையது செயலாளர் பஷீர்.விமன் இந்தியா மூவ்மென்ட் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக தெற்கு தொகுதி தலைவர் ஷாஜகான் நன்றி உரையாற்றினார்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *