திருவொற்றியூர்
காலடிப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வார்டு சபை கூட்டத்தில் தீர்மானம்.
திருவொற்றியூர் மண்டலம் 12 வது வட்ட திமுக கவுன்சிலரும் வழக் கறிஞர் கவீ கணேசன் அலுவலகத்தில் நடைபெற்ற வார்டு சபை கூட்டத்தில்
12 வார்டு கவுன்சிலர் வீ.கவி கணேசன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் நக்கீரன் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வார்டு சபை கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் வார்டு சபை உறுப்பினர்கள் அவர்களது பகுதியில் பிரச்சனைகளை தீர்க்க கோரி அதிகாரிகளிடம் எடுத்து கூறினார்கள். அதில் இந்த வார்டில் உள்ளவர்கள் பக்கத்து வார்டுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்க மிகவும் கஷ்டப்படுவதால் 12வது வட்டத்திலேயே புதிய ரேஷன்கடை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
திடக்கழிவு மேலாண்மைக்கு தனிநிலை குழு அமைக்கவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடுதலாக சட்டமன்ற நிதிநிலை அறிக்கை மாந கராட்சியின் நிதி நிலை அறிக்கைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முக்கிய தீர்மானமாக வார்டில் உள்ள பாலகிருஷ்ணா நகரில் காவலர் குடியிருப்பில் 4 பிளாட்டுகள் காலியாக உள்ளதால் அந்த இடங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த இடத்தில் மாணவர்களின் நலனுக்காக ஒரு உயர்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் வரி வசூலிப்பாளர் சுந்தரமூர்த்தி சுகாதார ஆய்வாளர் ரமேஷ்ராஜ் குடிநீர் வாரிய உதவி பொறியாளர் நந்தகுமார் உரிமம் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் வார்டுசபை உறுப்பினர்கள் முன்னாள் கவுன்சி லர்கள் கே.வி.சதீஷ் குமார் வி.வேலு பாரதி பாக்கிய மணி ரகு மாயா, பாலாஜி சூரி வசந்த குமார் ஐடிசி ரவி மற்றும் வழக்கறிஞர் ஆ.வி.மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.