தஞ்சாவூரில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் 50 க்கு மேற்பட்ட கிராமியக்கலைஞர்கள் இணைந்து நடத்திய கலைச்சங்கமம் கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய நிர்வாகக்குழு உறுப்பினர் வளப்பக்குடி வீரசங்கர் தலைமை தாங்கினார்.டி.ஜே சுப்ரமண்யம் முன்னிலை வகித்தார்.பிரமாண்ட நிகழ்வுகளைப்பாராட்டி மாநகர மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ,ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்
முன்னதாக துரை.கோவிந்தராஜ் அனைவரும் வரவேற்றார். தொடர்ந்து புலியூர் பாலு குழுவினரின் நையாண்டி மேளம், திருக்காட்டுப்பள்ளி ரெங்கராஜ் குழுவினரின் பறையாட்டம், வல்லம் செல்வி குழுவினரின் கரகாட்டம்,பறையாட்டம் , கர்ண.பிரபாகர், தமிழோசை சு.ராஜீவ்காந்தி, நல்லிச்சேரி திருத்தணி, வேல்முத்து, கலைச்செல்வி, கௌரிசங்கர் ஆகியோர் வழங்கிய நாட்டுப்புறப்பாடல்கள் ,திருவையாறு இசைக்கல்லூரி மாணவியரின் கும்மி,கோலாட்டம் , காடகன் கலைமன்றத்தாரின் “வள்ளித்திருமணம் ” இசைநாடகம் , தஞ்சை ஸ்ரீஹரி குழுவினரின் தெய்வீக நடனம் என பல்சுவை நிழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. கலை நிகழ்ச்சிகளை மாநகரப்பொது மக்கள் கண்டுகளித்து மகிழ்ந்தனர்