
புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான பிரபுதாஸ் நேற்று தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.மங்கல லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், அசோக்பாபு, ராமலிங்கம், சிவசங்கரன், மூத்த பாஜக நிர்வாகி இளங்கோ, கல்வியாளர் பிரிவு நிர்வாகி நாகேஸ்வரன், மகளிர் அணி தலைவி கீதா ஆகியோர் கலந்துகொண்டு பிரபுதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழை எளிய மக்களை தேர்வு செய்து சுமார் 1050 பேருக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இந்த விழாவில் லேப்டாப், தையல் இயந்திரம், தள்ளுவண்டி,தட்டு வண்டி, பூக்கடை ஸ்டால், ஏர் கூலர், கிரைண்டர், மிக்ஸி, குக்கர், கேஸ் அடுப்பு, ஹாட் பாக்ஸ், அயன் பாக்ஸ், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சீருடைகள் (ஜெர்சி), விளையாட்டு உபகரணங்கள், பள்ளிக்கூட பேக், நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் இல்லத்தரசிகளுக்கு புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொது செயலாளர் அசோக், பாஜக நிர்வாகிகள் அசோக் வினோத், பச்சையப்பன், பிரேம்குமார், ஜோயல், குப்புசாமி, விக்னேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் நந்தினி, புஷ்பகாந்தி, நந்தினி, சாந்தி, நிர்மலா மற்றும் தொகுதியைச் சேர்ந்த பாஜகவினர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் வணிகர்கள் தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பிரபுதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற சுமார் 1500 பேருக்கு திருமண மண்டபத்தில் தலைவாழை இலையுடன் பிரியாணி உள்ளிட்ட அசைவ விருந்தும் வழங்கப்பட்டது.