திருவாரூர் விஷ்ணு துர்க்கைக்கு தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு தை மாதம் என்றாலே அதில் வரும் விசேஷ நாட்கள் தெய்வ சக்தி நிறைந்த நாட்களாக கருதப்படுகிறது. அதில் இன்று திருவாரூர் கீழவீதியில் உள்ள அருள்மிகு பஞ்சின் மெல்லடியால் சமேத தூவாயநாதர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு விஷ்ணு துர்க்கைக்கு தை கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.