திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ள கிணறு என்ற பகுதியில் இயங்கி வரும் தேவாலயத்தின் கதவுகளை உடைத்த மர்ம நபர்கள்…
சம்பவ இடத்தில் பல்லடம் காவல்துறையினர் விசாரணை…
பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தேவாலயத்தின் கதவுகளை நேற்று இரவு மர்ம நபர்கள் கல்லை கொண்டு உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
