எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் பரிகார அர்ச்சனை செய்து வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடன் ஆகிய நாகேஸ்வரன் உடையார் திருக்கோயில் உள்ளது ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் அமிர்த ராகு பகவானாக தனி சன்னதியில் ராகு பகவான் அருள் பாலிக்கிறார்

ராகுவும் கேதுவும் தவமிருந்து, இறைவனை வழிபட்டு கிரகப் பதவியை அடைந்தனர். அந்த இறைவன் பெயர் நாகேஸ்வரமுடையார், இறைவி புன்னாக வல்லி. இவர்கள் அருள்பாலிக்கும் இடம் சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயில்

கோவிலின் முகப்பில் அழகிய மூன்று நிலை ராஜகோபுரம், உள்ளே நுழைந்ததும் அழகான வேலைபாடுகளுடன் கூடிய மகா மண்டபம் உள்ளது. அதனை அடுத்து அர்த்த மண்டபமும், கருவறகருவறையில் இறைவன் நாகேஸ்வர முடையார் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவி புன்னாகவல்லி தென்திசை நோக்கி அருள்புரிகிறாள்.

இக்கோவிலில் ஆகம விதிப்படி துர்க்கை மற்றும் நவக்கிரக சன்னிதிகள் இல்லை. ராகுவின் நண்பன் சனி என்பதால் சனி தன் மனைவியுடன் ராகுவின் சன்னிதியில் இருக்கிறார்.

மேலும் ராகு, கேதுவுக்கு இந்த ஆலயத்தில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் ஆதி ராகு தலமாகவும்

அமுதம் உண்ட அசுரன், சிரம் வெட்டப்பட்டு சீர்காழியில் விழுந்தான். எனவே இத்தலம் சிரபுரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது தவிர பிரம்மபுரம், வேணுபுரம்,புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், புறவம், சண்பை, காளிபுரம், கொச்சைவையம், கழுமலம் என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.

ராகுவுக்கும் கேதுவுக்கும் கிரகப்பதவி கிடைத்தது அல்லவா? அது என்ன கதை? பூர்வ காலத்தில் தேவரும், அசுரரும் கூடி மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து லட்சுமி, தன்வந்திரி, சிந்தாமணி, ஐராவதம், ஆலகால விஷம், காமதேனு முதலியனமுதலியவற்றை நீக்கும் மருந்தாகிய தேவாமிர்தம் தோன்றியது.

அசுரர்கள் இந்த தேவாமிர்தத்தை உண்டால் அவர்களுக்கு அழிவு இருக்காது. மேலும், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே எப்போதும் சண்டை நடந்து கொண்டேயிருக்கும்எனவே, அசுரர்களை எப்படியாவது அமிர்தத்தை உண்ணாமல் தடுத்துவிட வேண்டும் என்று எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி உருவமெடுத்தார்.

மோகினியின் அழகைக் கண்ட அசுரர்கள் மதிமயங்கினர். உணர்விழந்து செயலற்று நின்றனர். இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்த மோகினி உருவிலிருந்த மகாவிஷ்ணு, தேவர் களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தார். அசுரர்களில் விப்ரசித்திக்கும், இரணியனின் தங்கை சிம்கை என்பவளுக்கும் பிறந்த ‘சியிங்கேயன்’ என்பவன் தேவ வடிவம் கொண்டு சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று தேவாமிர்தத்தை வாங்கி உண்டான். இதனை அறிந்த சூரிய, சந்திரர்கள் தேவாமிர்தத்தை வாங்கி உண்டான். இதனை அறிந்த சூரிய, சந்திரர்கள் தேவாமிர்தத்தைப் பரிமாறிக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் அதைக் குறிப்பால் உணர்த்தினர். அவர் தன் கையிலிருந்த சட்டுவத்தால் (கரண்டி) அந்த அசுரனை ஓங்கி அடித்தார்.

அடித்த வேகத்தில் அந்த அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு, தலை ‘சிரபுரம்’ என்ற தற்போதைய சீர்காழியிலும், உடல் ‘செம்பாம்பின் குடி’யிலும் விழுந்தது. தேவார்மிதம் உண்டதால், அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாயிற்று. இந்த அரவங்கள் சிவபெருமானைத் தியானித்து, காற்றை மட்டுமே உணவாகக் உணவாகக் கொண்டு கடும் தவம் புரிய, இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது அரவங்கள் சிவபெருமானிடம் சூரிய, சந்திரனை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப் படைக்கும் வலிமையையும் தங்களுக்கு அருளுமாறு வேண்டினர்.

சூரிய, சந்திரர்கள் உங்களுக்குப் பகைவர்கள்தான். ஆனால், அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள். எனவே, அமர பட்சம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நீங்கள்

அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தலாம்’ என்று இறைவன் அவர்களுக்கு வரம் அளித்தார். மேலும் இறைவன் அருளால் மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ‘ராகு’வும், பாம்புத் தலையும் மனித உடலும் கொண்டு ‘கேது’வும் தோன்றினார்கள். அதுவரை இருந்த ஏழு கிரகங்களுடன் சேர்ந்து ஒன்பது கிரகங்களாக (நவக்கிரகங்களாக) அவர்கள் விளங்கும்படி வரமளித்தார் சிவபெருமான் என்பது புராண வரலாறு.

இந்த ஆலயத்தில் தினமும் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இங்கு ஞாயிறு அன்று நடைபெறும் பரிகார பூஜை சிறப்பு வாய்ந்தது. ராகு, கேது சர்ப்ப தோஷம்

உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

பிரதி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இங்கு சுவாமி, அம்மன் மற்றும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள் ராகு, கேது சன்னிதிகளை இடதுபுறம் 9 முறையும், வலதுபுறம் 3 முறையும் அடி பிரதட்சணம் செய்கின்றனர். இப்படி 11 வாரம் செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுகிறது என்ற நம்பிக்கை உள்ளது.

ராகு தோஷம் உள்ளவர்கள் உளுந்து தானியம் மீதும், கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியம் மீதும் தீபம் ஏற்றி வழிபட, தோஷத்தின் வீரியம் குறையும் என்று நம்புகின்றனர்.

ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று பிரவேசிக்கிறார்.பிரசித்தி பெற்ற இக்கோயிலில் இன்று ராகு பெயர்ச்சியை முன்னிட்டு பிற்பகல் 2 மணி முதல் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மாலை 4:20 பெயர்ச்சி தீபாராதனை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன், ஆய்வர் பிரகாஷ் மற்றும் அறங்காவலர்கள், கோயில் கணக்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *