கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முருகாளி எஸ்டேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று திடீரென சுறாவழி காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள சர்ச் அருகே உள்ள சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு மின்கம்பங்கள் மின் கம்பிகள் அறுந்து சாய்ந்து கீழே விழுந்தது இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக அவ்வழியாக செல்லும் பேருந்து சிறிது தாமதமாக சென்றதால் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை மேலும் அப்பகுதியில் இரண்டு மின்கம்பம் சாய்ந்துள்ளதால் அப்பகுதியை சுற்றியுள்ள கல்யாணப் பந்தல், முருகாளி மற்றும் ஷேக்கல்முடி ஆகிய பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்