துறையூரில் மணல் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் 28/04/2025 அன்று துறையூர் மணல் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ,ஜேசிபி பொக்கிலின் இயந்திர உரிமையாளர்கள், ஒரு யூனிட் டிப்பர் டிராக்டர் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சங்கத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெறும் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்பொழுது சங்க தலைவர் மோகன்தாஸ் பேசுகையில், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற கோரியும், டோல்கேட் கட்டணங்கள் லாரி ஜேசிபிக்கான இன்சூரன்ஸ் பிரீமியம், உதிரிபாகங்கள் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், லாரி ஜேசிபி வாகனங்களுக்கான வாடகையை உயர்த்தக் கோரியும், மூடப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரியும் துறையூர் மணல் டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஜேசிபி பொக்கிலின் இயந்திர உரிமையாளர்கள், ஒரு யூனிட் டிப்பர் டிராக்டர் உரிமையாளர்கள் நல சங்க சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
இதில் டிப்பர் லாரி, ஜேசிபி பொக்கிலின், டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து டிப்பர் லாரி, ஜேசிபி பொக்கிலின் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் கட்டிட வேலைகள் ஒப்பந்த பணிகள் செய்வதில் தாமதம் ஏற்படும் சூழல் ஏற்படும்.எனவே தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து உடனடியாக நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் அதுவரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்