எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் புதிய நுழைவு வாயில் திறக்கப்பட்டது .
சீர்காழி ஏப்ரல் 28, சீர்காழி நகரில் 1896 ஆம் ஆண்டு முதல் கடந்த 129 ஆண்டு காலமாக கல்விப் பணியாற்றி வரும் ச.மு.இ மேல்நிலைப்பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு துறையில் மாநில போட்டிகள், தேசியப் போட்டிகளில் பல பதக்கங்கள் வென்று சீர்காழி நகரில் 2000 மாணவர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 125 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் நினைவாக ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் 1996 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களான தென்னலகுடி கிராமத்தை சார்ந்த மிராசு கோவிந்தராஜன் அவர்களின் மகன் ஜி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் நெப்பத்தூர் ரகுநாதன் அவர்களின் மகன் ஆர்.விவேக் ஆகிய இருவரும் சேர்ந்து தான் பயின்ற பள்ளிக்கு புதிய நுழைவு வாயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துகின்ற வகையிலே மிக அற்புதமாக நுழைவாயில் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி குழு தலைவர் ஆர். சிதம்பரநாதன் தலைமையேற்க, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம். கபாலி முன்னிலை வகிக்க, பள்ளி செயலர் வி. சொக்கலிங்கம் நுழைவு வாயிலை திறந்து வைத்து மாணவர்களின் கொடையுள்ளத்தை பாராட்டினார்கள்.
விழா ஏற்பாட்டினை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். அறிவுடை நம்பி செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சீனுவாசன், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ். முரளிதரன்,என். துளசிரங்கன், டி. சீனிவாசன் ஆகியோர் உட்பட 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள்,பள்ளி மாணவ,மாணவிகள் ஏராளமானோர் கொடை உள்ளம் கொண்ட முன்னாள் மாணவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் விவேக் ஆகியோர்களை பாராட்டினர்.