தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஏப்- 28. தஞ்சாவூர் இந்திய ஜனநாயக கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு மாநகர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொடிகள் ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் ஆலோசனைப்படியும், கட்சியின் தலைவர் டாக்டர் இளையவேந்தர் வழிகாட்டுதல்படியும்,
பொதுச்செயலாளர் மூத்த வழக்கறிஞர் ராஜன் பிறந்த நாளை முன்னிட்டும்
தஞ்சை மாவட்டத்தின் சார்பில் பல இடங்களில் கொடிகள் ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் சுமார் ஆயிரம் நபர்களுக்கு அன்னதானமும் வழங்கும் விழா மாநில போராட்ட குழு செயலாளரும், உயர்மட்ட குழு உறுப்பினருமான எஸ்.சிமியோன் சேவியர் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
வகித்தார். பா.மு.சா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.திருமாறன் முன்னிலை வகித்தார். கட்சியின் பதினாறாம் ஆண்டு துவக்க நாள் விழா நிகழ்ச்சியில் இளைய தலைமுறை மற்றும் வருங்கால தலைமுறையினர் உடலை, உயிரை, குடும்பங்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுகை முற்றிலுமாக ஒழித்திடுவோம், போதை இல்லாத ஒரு தமிழ் நாட்டை உருவாக்கிடுவோம், காவிரி டெல்டா மண்டலத்தை அழிவு திட்டங்களில் இருந்து பாதுகாப்போம், விவசாயிகளின் உரிமை மற்றும் மக்களின் உரிமைகளுக்காக போராடுவோம், அனைத்து இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வோம், பெண்களுக்கு சம உரிமை, சம வேலை வாய்ப்புகளுக்கு துணை நிற்போம், என்று கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க நாள் நிகழ்ச்சியில் உறுதி ஏற்கப்பட்டது. நிகழ்வில் தஞ்சை சட்டமன்ற மாவட்டத் தலைவர் க்ஷஞ் ஆர்.ஸ்டீபன், ஒரத்தநாடு சட்டமன்ற தலைவர் குணசேகரன், திருவையாறு சட்டமன்ற தொகுதி தலைவர் கே.ராஜகோபால், மாவட்டச் செயலாளர் வினோபா, மாவட்ட பொருளாளர்
தி.கே.முத்துகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வளம் ள்ஹ் உள்ள, ஏ.சித்திரவேல், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ஆர்.சீத்தாலட்சுமி, மகளிர் அணி செயலாளர் குணசீலி, மாவட்டத் துணைத் தலைவர் எம்.கணேசன், மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் பன்னீர், திருவையாறு ஒன்றிய தலைவர் முத்தமிழ்செல்வன், தஞ்சை ஒன்றிய தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் வடிவேல், திருவையாறு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கண்ணன், துணைச் செயலாளர் குரு, தஞ்சை சட்டமன்ற மாவட்ட செயலாளர் கவியரசன், தஞ்சை நகர தலைவர் ஜஸ்டின் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், முத்துசாமி, தமிழழகன், பூதலூர் ஒன்றிய செயலாளர் கமல்,வேந்தர், பேரவை செயலாளர் அமல், மகளிர் அணி மேகலா மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.