தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மற்றும் தன்னார்வ இரத்ததான அமைப்பின் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இம்முகாமை, கல்லூரி நிர்வாகி அல்ஹாஜ் எஸ்.காதிர் ஷெரிப், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட துணைத் தலைவர் பொறியாளர் முத்துக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்தியன் ரெட்கிராஸ் இரத்த வங்கி சார்பில், டாக்டர் செல்வவேல் தலைமையில், அப்துல் கபூர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் முகாமை நடத்தினர். முகாமில் 52 மாணவர்கள் தன்னார்வமாக ரத்ததானம் செய்தனர்.
இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர்.அல்ஹாஜி, யூத் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கௌரவ செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை, கல்லூரி யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் நீலகண்டன் மற்றும் தன்னார்வ இரத்ததான அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சையது அஹ்மத் கபீர் மேற்கொண்டிருந்தனர்.