திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்பாம்புரம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு வண்டுசேர் குழலி உடனுறை அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் உள்ளது.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59ஆவது சிவத்தலமாகும் பிற கோவில்களில் இருப்பதை போல இராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் இருவரும் ஏக சரீரமாக விளங்கி இறைவனை வழிபட்ட தலம் என்பதால், இங்கு வழிபடுவதன் மூலம் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணத் தடை, கடன் தொல்லை, கனவில் அடிக்கடி பாம்பு தோன்றுதல் என அனைத்து வித தோஷத்திற்கும் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்யும் தலமாக விளங்கி வருகிறது.
மேலும், 18 வருட இராகு தசா நடந்தால், 7 வருட கேது தசா நடந்தால், லக்னத்துக்கு 2இல் இராகுவோ கேதுவோ இருந்து, இலக்னத்துக்கு 8இல் கேதுவோ இராகுவோ இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு சிறப்பு மிக்க கோவிலில் இராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது இன்று மாலை சரியாக 04.20 மணிக்கு இராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் கேது பகவான் கன்னி ராசிகளில் இருந்து சிம்ம ராசிக்கும் இடம்பெயர்கிறார் அதனை முன்னிட்டு சுவாமிக்கு 1008 லிட்டர் பால் மஞ்சள் இளநீர் சந்தனம் போன்ற திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த இராகு கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருப்பாம்புரம் கிராம மக்கள் மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அசம்பாவிதங்களை தவிற்க காவல் துறை சார்பில் 300க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு இருந்தனர். அதேபோல ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.