இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி நியமனத்திற்கான ஆணை வழங்கும் விழா.கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் 2164 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை இவ்விழாவில் வழங்கப்பட்டது. இது மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றின் வெளிப்பாடாக மட்டுமன்றி தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

கல்லூரியின் வேலைவாய்ப்பு துறை இயக்குனர் முனைவர் ஜி டாலின் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.டி.சி.எஸ், ஜோகோ, விப்ரோ ஆர்டிக் ,காக்னிசன்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பணி வாய்ப்புகளை மாணவர்கள் பெறுவது கல்லூரியின் மிகப்பெரிய சாதனையாக அமைகின்றது என்று தமது உரையில் எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ .பொன்னுச்சாமி அவர்கள் கலந்துகொண்டு பணி நியமன ஆணை பெற்ற மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் அவர்களது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி இது எனவும் பாராட்டினார்.

இவ்விழாவில் கல்லூரியில் நிர்வாக அறங்காவலர் திருமதி சரஸ்வதி கண்ணையன் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் நம் கல்லூரி மாணவர்கள் பணிபுரிய இருப்பது நம் கல்வி நிறுவனத்திற்கு இன்னும் ஒரு மைல் கல்லாக அமையும் என்று கூறி ,எங்கு சென்றாலும் பணிச்சுழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொண்டு வெற்றியாளர்களாக இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் வலம் பெற வேண்டும் என மாணவச் செல்வங்களை வாழ்த்தினார்.

கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலர் முனைவர் பிரியா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்.

இவ்விழாவில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிந்தனை கவிஞர் கவிதாசன் அவர்கள் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார் மாணவர்கள் தங்களுக்கு உள்ள தலைமை பண்பு. முடிவெடுக்கும் ஆற்றல். சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் பாங்கு ஆகியவை மாணவர்களின் வெற்றிக்கு வழிகோலாக அமையும் என்று எடுத்துரைத்து மாணவர்களின் இந்த வெற்றிப் பயணம் அவர்களின் வாழ்க்கையில் புதிய ஒரு விடியலை உருவாக்கும் என மாணவர்களை வாழ்த்தினார்.
நிகழ்வின் இறுதியில் ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் பிரியா சரண் தாமஸ் அவர்கள் நன்றி உரை வழங்கினார்.

இவ்விழாவில் பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *