கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். பல்லடம் சுற்றுவட்டார பகுதி முழுவதுமாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீர் ஒரு மடை விட்டு ஒரு மடை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏழு நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

முறையான தண்ணீர் கிடைக்காததால் நெல் சாகுபடியை பல்லடம் பகுதி விவசாயிகள் முழுவதுமாக கைவிட்டு, சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் பந்தல் காய்கறிகள் என கிணற்று பாசனத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

கூடுதலாக போதுமான லாபம் இல்லாத காரணத்தினாலும், ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணத்தினாலும் நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருப்பா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வம் என்பவர் நொச்சிப்பாளையம் என்ற பகுதியில் நான்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இயற்கை முறையில் பசுந்தாள் உரம் தயாரித்து வந்துள்ளார்.

விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் பசுந்தால் உறங்கலை பயன்படுத்தி இயற்கையான முறையில் காய்கறிகளை பயிரிட்டு வந்த செல்வம் ஏன் நெல் சாகுபடி செய்யக்கூடாது? என்ற எண்ணத்தோடு, தூய மல்லி ரக நெல்லை தற்பொழுது பயிரிட்டுள்ளார்.

முறையாக நிலத்தை பயன்படுத்தி, நாற்றை நற்று நடவும் முறையில் கொழிஞ்சி, கோழி குப்பை, ஏறுக்கு ஆவாரம் தலை, மற்றும் புளிக்க வைத்த தவிடு ஆகியவற்றை பயன்படுத்தி 130 நாட்களில் மகசூல் தரும் தூய மல்லி ரக நெல்லை தற்பொழுது இயற்கையாக விளைவித்து வருகிறார்.

முறையான ஒளிச்சேர்க்கை மற்றும் அனைத்து இலைகளும் விதை பூர்த்தி செய்யும் சிலிக் கான் சத்துக்கள் ஆகியவற்றை வாரம் ஒரு முறை இயற்கை முறையில் கொடுத்து வருகிறார்.

இந்தப் பகுதி முழுவதும் களிப்பு மண் என்பதால் நெல் சாகுபடி செய்வதற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுவதாகவும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீரை நம்பி விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும் இந்த வருடம் நல்ல மழை பொழிவு இருந்தால் நெல் சாகுபடி செய்துள்ளதாகவும் இன்னும் 40 நாள்களில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வித ரசாயனங்களையும் பயன்படுத்தாமல் தூய மல்லி ரக நெல்லை பயிரிட்டுள்ளதால் நெல் அறுவடை செய்வதற்கு முன்பே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கும் நெல் வேண்டும் என அட்வான்ஸ் புக்கிங் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

நடவு ஆல் கூலி போன்ற அனைத்து செலவுகளையும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் ஒன்றை டன் நெல் கிடைக்கும் எனவும் முழுமையாக இயற்கையான முறையில் விளைவிப்பதால் லாபகரமான வகையில் நெல்லை அறுவடை செய்ய உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் நெல் சாகுபடி கைவிட்ட விவசாயிகள் இயற்கை விவசாயி செல்வத்தின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து இளைஞர்களும் தங்களது வாழ்நாளில் ஒரு வருடத்தையாவது விவசாயிகளுக்கு உதவ முன் வந்தால் மட்டுமே நஞ்சில்லா உணவை தயாரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this to your Friends