திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலராக பணியாற்றியவர் எஸ் .சங்கர் இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பணகுடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த சங்கரை வழிமறித்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதனைக் கண்டித்து தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் 108 ஊராட்சி செயலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினார்கள் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு முன்பு கொலை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பெரியகுளத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் 17 பேரும் இதேபோல் தேனி கம்பம் ஆண்டிபட்டி போடிநாயக்கனூர் சின்னமனூர் கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து 130 ஊராட்சிகளில் உள்ள 108 ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this to your Friends