கோவை
காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட சிவாச்சாரியார் கூட்டமைப்பு சார்பாக அஞ்சலி செலுத்தினர்.
காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலால் அப்பாவி மக்கள் 28பேர் பலியாகினர்.இந்நிலையில் இறந்தவர்களுக்கு ஆதிசைவ சிவாச்சாரியார் கூட்டமைப்பு சார்பாக கோவை மாவட்ட நிர்வாகிகள் கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள மூகாம்பிகை மண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிவாச்சாரியார் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என அஞ்சலி செலுத்தினர்