பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு 100 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா தமிழக நாயுடு கூட்டமைப்பு மாநில தலைவர் ரெங்கராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் தேமுதிக மாவட்ட தலைவர் சிவா ஐயப்பன், நன்னிலம் இயற்கை விவசாயிகள் சங்க நிறுவனர் கோ. கண்ணபிரான் , ராணி மங்கம்மாள் அறக்கட்டளை நிறுவனர் புவனேந்திரன்,பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது .

பின்பு பெரம்பலூர் நகராட்சிக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவ சிலையை அகற்றும் நோக்கத்தை கைவிடும் படி கோஷமிட்டு கோரிக்கையை முன் வைத்தனர்.

Share this to your Friends