தென்காசியில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன் இராதாகிருஷ்ணன் நயினார் நாகேந்திரன் திரைப்பட நடிகர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந் தன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டதலைவர்கள் கே.ஏ.ராஜேஷ் ராஜா, தீனதயாளன் அன்புராஜ், பாண்டித்துரை, ராம ராஜா, பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பாலகிருஷ்ணன், சுந்தர், விவேகானந்தன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். தென்காசி நகர பாஜக தலைவர் மந்திரமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம் எல்ஏ, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், முன்னாள் எம் எல்ஏ நடிகர் சரத்குமார், அய்யா வழி சிவச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் தென்காசி எம்எல்ஏ நடிகர் சரத்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2026ம் ஆண்டு தேர்தல் அக்னி பரிட்சை. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். நம் அனைவரின் எண்ணமும். பாஜக ஆட்சி அமைப்ப தாக இருக்க வேண்டும். 16 ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை நடத்தினேன். 1996ல் அதிமுகவை எதிர்த்து தொடர்ந்து 40 நாட்கள் பிரசாரம் செய் தேன் என்னை விட அதிக அரசியல் தெரிந்தவர் கலை உலகில் யாரும் கிடையாது. எல்லாவற்றையும் விட்டு விட்டு பாஜகவிற்கு வந்து விட்டதாக சொல்கிறார்கள் மத்தியில் ஸ்திரமான ஆட்சி நடக்கிறது. தமிழகத் தில் அதே போன்று ஸ்திர மான பாஜக ஆட்சி உருவா குவதற்கான காலம் கனிந்து விட்டது.
நாகரிக அரசியல் செய்யும் இயக்கம் பாஜ, நான் சங்கியாக மாறிவிட்டதாக கூறுகிறார்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நம்மை நம்ப ஆரம்பித்து விட்டார்கள். அனைவ ரையும் ஒன்றிணைத்து செல்வோம். இங்கு உள்ள வர்களுக்கு மோடியின் அருமை தெரியவில்லை. உலக அரங்கில் முதன்மை தேசமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற் காக திட்டம் தீட்டி மோடி செயல்பட்டு வருகிறார்’ என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில பாஜக பொதுக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கிருஷ்ணசாமி, மாரியம்மாள். மீனாட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள் சங்கரசுப்பிரம ணியன், லட்சுமண பெரு மாள், பொன்னம்மாள் கருப்பசாமி, சீதாலட்சுமி, சுனிதா, சங்கரநாராய ணன், ரேவதி பாலீஸ்வரன், மகேஸ்வரி, மகேஸ்வரன், பேச்சி கலாமுருகன், நிர்வாகிகள் முத்துக்குமார், முத துலட்சுமி, பாலமுருகன். குத்தாலிங்கம் கருப்பசாமி, ராஜ்குமார், பாலசுப்ரமணி யன் முத்துக்கிருஷ்ணன் குற்றாலம் திருமுருகள். செந்தூர்பாண்டியன். பிலவேந்திரன், விஷ்ணு உள்பட பலபொக்கேற்ற னர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தி முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.