பள்ளிகல்வித்துறை சார்பில் நெல்லையில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனையர் கலந்து கொண்டனர்.

நீச்சல் போட்டியில் மதுரை நீச்சல் வீரர்கள் தங்கம் 7, வெள்ளி 1, வெண்கலம் 15 என மொத்தம் 23 பதக்கங்களை வென்றனர்.
14 வயதிற்குட்பட்ட பிரிவில் சி.இ.ஒ.ஏ.பள்ளி மாணவர்கள் ஹர்ஷன் 2வெண்கலம், அரவிந்த் பிரசாத் தங்கம், விசுவாசன், ஆகாஷ் வெண்கலம் வென்றனர். நல்லமணி பள்ளி மாணவி கள் சாதனாஸ்ரீ, ஹாஷினி, கனிஷ்கா, ஹிரானிகா 4×100 மீட்டர் பிரிஸ்டைல் ரிலே வெண்கலம் பெற்றனர்.

17 வயதிற்குட்பட்ட பிரிவில் சி.இ.ஒ.ஏ. பள்ளி மாணவன் பவித்ரன் 4×100 மீ பிரிஸ்டையில் தங்கம், அதே பள்ளி மாணவியர் தான்யாஸ்ரீ 2 தங்கம், 2 வெண்கலமும், கார்த்திகா, சுபதக்க்ஷனா ஆகியோர் தங்கமும், புனித மரியன்னை பள்ளி மாணவி தங்கம் வென்றனர்.

19 வயதிற்குட்பட்ட பிரிவில் நல்லமணி மாணவி தமிழினி ஒரு வெள்ளி, 2 வெண்கலமும், அதே பள்ளி மாணவிகள் ராஜஸ்ரீ, மலையரசி, அழகுநாச்சி ஆகியோர் வெண்கலமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட நீச்சல் சங்க தலைவர் ஸ்டாலின்ஆரோக்கியராஜ், செயலாளர் கண்ணன், பொருளாளர் அமிர்தராஜ், பயிற்சியாளர்கள் விஜயக்குமார், பறங்குன்றம், நல்லமணி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஷீபா ஆகியோர் பாராட்டினர்.

Share this to your Friends