தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்புதினம் தென்காசியில் சங்க கொடி ஏற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்டத்தலைவர் மாரியப்பன் கொடி ஏற்றிவைத்தார்.அதன்பின் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தலைமையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

மாநில துணைத்தலைவர் பேராசிரியர் சங்கரி, இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார், மாவட்ட நிர்வாகிகள் பால்சாமி, சலீம் முகம்மது மீரான், செல்லப்பா, மோகனசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர்.

சங்கரன்கோவில் வட்டகிளை நிர்வாகிகள் குருசாமி, ரவிச்சந்திரன், சிக்கந்தர், ஆலங்குளம் வட்டகிளை நிர்வாகிகள் ஆதிநாராயணன், பாலு, கடையநல்லுர் அப்துல்காதர், சிவகிரி வட்டகிளை ராஜ், செங்கோட்டை அழகன் மாவட்ட நிர்வாகிகள் துரைடேனியல், அருணாச்சலம், ஆறுமுகம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் நாராயணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Share this to your Friends