மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அறிவுரை தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை மாணவ,மாணவிகளிடம் கலந்துரையாடி பேசுகையில்,நம் பெற்றோரை தவிர யாரையும் நம்மைத் தொட அனுமதிக்கக்கூடாது. யாரேனும் கேலி செய்தால் உடனடியாக நாம் பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் தெரிவிக்க வேண்டும். நாம் ரோட்டில் நடந்து செல்லும் பொழுது இரட்டை அர்த்தங்களில் யார் பேசினாலும் நாம் புகார் கொடுக்கலாம். நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் 1098 என்ற எண்ணிற்கு கால் செய்து புகார் அளிக்கலாம் மற்றும் போக்சோ சட்டம் குறித்தும், பள்ளி குழந்தைகளிடம் அறிவுரைகள் வழங்கி பேசினார். நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் நாகராஜ் உட்பட ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் ஏராளமான கேள்விகளுக்கு மிக பொறுமையாக தெளிவான விளக்கங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதில் கூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். படவிளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு குறித்த தகவல்களை சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை மாணவர்களுக்கு விரிவான முறையில் எடுத்துக் கூறினார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கூறப்பட்டது.

Share this to your Friends