கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு.

அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வி பயிலும்
கல்லூரி மாணவர்களுக்கான உத்வேக நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள்
வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் வேளாங்கண்ணி பள்ளி குழுமம், மற்றும்
அறிஞர் அண்ணா கல்லூரியின் தாளாளர் திரு. சி. கூத்தரசன் அவர்கள் முன்னிலை
வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர்
முனைவர். அ.கலியமூர்த்தி “சராசரிகளும் சக்ரவர்த்தியாகலாம்”
என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தன்னுடைய சிறப்பு உரையில்,மாணவர்கள் இலட்சியத்தை மனதில் வைத்து உழைத்து வாழ்வில் வெற்றி காணவேண்டும் என்றும் கல்வியினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கல்வியின் அவசியத்தை
மாணவர்களுக்கு அருமையாக எடுத்துரைத்தார்.

ஒரு மனிதன் தான் பெற்ற செல்வங்களில் அழியாத செல்வம் கல்வி செல்வம் மட்டுமே என்று சிறப்புரையாற்றினார். இன்றைய இளைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் என்றும் அதை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் ஆசிரிய பெருமக்கள் மாணவர்களை எவ்வாறு வழிநடத்த
வேண்டும் என்றும் சிறப்பு சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்வில் கல்லூரியில்
பயிலும் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலைலயச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியாக வேதியியல் துறை தலைவர் திரு.இரா.
சிவகுமார் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நாட்டுப்பண்னுடன் நிறைவு பெற்றது.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.

Share this to your Friends