புதுச்சேரியை சேர்ந்த லக்கி ஜென்ரல்ஸ் lg கிளாடியேட்டர் மற்றும் லக்கி ஜெனரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

புதுச்சேரியை சேர்ந்த லக்கி ஜெனரல்ஸ் – எல்.ஜி கிளாடியேட்டர்ஸ் மற்றும் லக்கி ஜெனரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சேவை தொண்டு நிகழ்ச்சி 2025″ தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

லக்கி ஜெனரல்ஸ் நிறுவனத்தின் முழுமையான நிதியுதவியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கொண்ட மளிகைபொருட்கள் வழங்கப்பட்டது,

தொடர்ந்து கல்வி 100 கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் மற்றும் பள்ளிப்பைகள்,நோட்புக்குகள், பேனாக்கள் மற்றும் கல்விக்காக தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் சுமார் 200 நபர்களுக்கு இரத்தஅழுத்தம், சர்க்கரை அளவீடு மற்றும் இரத்த வகை கண்டறிதல் உள்ளிட்ட அடிப்படை சோதனைகள் வழங்கப்பட்டன. மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வந்த தகுதியான மருத்துவ குழு சேவைகளை வழங்கினார்கள்.

நிகழ்வில் கல்வித்துறை பிரதிநிதி இளமுருகன் @ஜானகிராமன் பங்கூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜாராம் உள்ளிட்ட
450-க்கும் மேற்பட்ட உள்ளூர் கலந்துகொண்டு மக்கள்பயனடைந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *