100 ஆங்கில பழமொழிகளை ஐந்து நிமிடத்தில் கூறி கோவை மாணவர் உலக சாதனை
கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன்,பிரித்திவ் 100 ஆங்கில பழமொழிகளை ஐந்து நிமிடத்தில் கூறி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்..
கோவை, தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர், சங்கீதா தம்பதியர் இவர்களின் இளைய மகன் பிரித்திவ். பனிரேண்டாம் வகுப்பு படித்து வரும் இவர், சிறு வயது முதலே பல்வேறு சாதனைகளை செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார்.
சுமார் எட்டு உலக சாதனைகளுக்கு மேல் பதிவு செய்துள்ள பிரித்திவ் தற்போது 100 ஆங்கில பழமொழிகளை ஐந்து நிமிடத்திற்குள் கூறி நோபல் உலக சாதனை படைத்துள்ளார்..
இவரது சாதனையை கண்காணித்த நோபல் புக் ஆப் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் மற்றும் கலை பண்பாட்டு துறையின் தீர்ப்பாளர் சரவணன் மாணவன் பிரித்திவிற்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தனர்.
இது குறித்து சாதனை மாணவர் பிரித்திவின் சகோதரர் பிரணவ் கூறுகையில்
மாணவன் பிரித்திவ் ஏழாவது படிக்கும்போதே மரங்களை காப்போம் எனும் தலைப்பில் பென்சில் பெட்டிகளை கொண்டு சாதனை புரிந்தது முதல் இது வரை பல்வேறு உலக சாதனைகள் செய்து வருவதாகவும், அவரது ஆர்வத்திற்கு தன்னால் ஆன உதவிகளை தாமும் தமது பெற்றோர்களும் செய்வதாக தெரிவித்தார்..
தொடர்ந்து உலக சாதனைகள் செய்து பிரணவிற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்..