செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மாதவரம் தபால்பட்டி அருகே உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 73 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த 20ஆம் தேதி அன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட விழாவில் முக்கிய நிகழ்வாக தேர் பவனி விழா நடைபெற்றது
பாரம்பரியமிக்க இந்த மூன்று வகை தேரில் முதலாவதாக காவல் தூதர் முன்னே செல்ல இரண்டாவது தேரில் அன்னை மரியாள் மற்றும் மூன்றாவது தேரில் புனித செபஸ்தியார் வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அனைத்து மக்களும் தரிசிக்கும் வகையில் இந்த திருத்தேர் பவனி ஊர்வலம் சென்றது
இந்தத் தேர் பவனில் கிறிஸ்தவர்கள் அல்லாமல் மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் அதே போல் சென்னை மட்டுமில்லாமல் மற்ற பகுதியும் சேர்ந்து அவர்களும் பல மாநிலங்களில் சேர்ந்தவர்களும் சுமார் ஆயிரக்கணக்கானோர் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு புனித செபஸ்தியாரை வழிபட்டு சென்றனர்.