தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், மக்கள் குறைதீர் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் விஸ்வநாதன் விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தார்
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- வேளாண்மை துறை மூலமாக தூர்வாரப்படுகின்ற சி C&D பாசன வாய்க்கால்கள் வாய்க்கால்கள் ஜூன் 12 ல் மேட்டுள் அணை திறப்பதற்கு முன்பாக காலதாமதம்படுத்தாகல் நல்லமுறையில் கடமடைவரையில் தாருவாரப்படுதல் வேண்டும் .
கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கங்கணில் விவ சாயிகள் வைத்திருக்கும் நாகைகடன் காலக் கெடு வட்டியையும் அசலையும் சேர்த்து கட்டி நகையை திருப்ப வேண்டும் என்ற கெடுபடியை தளர்த்தி அதற்கு பதிலாக வட்டியை மட்டும் கட்டி புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற உத்தரவை நமது தமிழக முதல்வர் அறிவித்தால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சிஅடைவார்கள்.
விவசாயிகள் நலன் கருதி காலதாமதப்படுத்தாமல் வேளாண்துறை தோட்டக்கலத்துறை வேளாண் பொறியியல் துறை மானிய திட்டங்கள் மே மாதத்திற்குள் அரசாணை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.
விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுைக்கு. காலதாமதப்படுத்தாமல் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும்.
நீர்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள, காவிரி, கல்லணை வெண்ணாறு ஆகியவைகளின் குளங்கள் ஏரிகள் பாசன வாய்க்கால்கள் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக தூர்வாரி உணர வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது என்றார்.