தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது ரூ.20 ஆயிரம் பறிமுதல்!
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாராபுரம் அருகே உள்ள பொன்னாபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடிக்க முயன்றனர்.
அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 54), கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமன் (56), மருதூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (31), சின்னக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (52), பொட்டிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து (45), தேர்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரான் (40), சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த வீரன் (55) மற்றும் பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என தெரியவந்தது.
இதையடுத்து 8. பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. எட்டு பேர் மீதுவழக்கு பதிவு செய்தனர்.