ஊசுடு தொகுதி மக்களின் சுமார் 75 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார்…
ஊசுடு தொகுதி மக்களின் சுமார் 75 வருட கோரிக்கையான பத்துகண்ணு முதல் கூனிமுடக்கு வரை சுமார் 3.5 கிலோ மீட்டர் 10 கிராமங்களுக்கு செல்லும் சாலைகளுக்கு மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்று ஊசுடு மக்களின் கோரிக்கை, கோரிக்கையாகவே இருந்து வந்த நிலையில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான AK சாய் ஜெ சரவணன் குமார் அவர்களின் சீரிய முயற்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சுமார் நூறு மின் கம்பங்களுடன் கூடிய 90 வாட்ஸ் LED மின்விளக்குகள் அமைப்பதற்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி கூனிமுடக்கு பகுதியில் நடைபெற்றது,
இதில் அமைச்சர் தலைமை தாங்கி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், உதவி பொறியாளர் செல்வ பாண்டியன், இளநிலை பொறியாளர் ஹரிபுத்திரி, பாஜக தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய் தியாகராஜன் தொகுதி தலைவர் முத்தால முரளி, கட்சி நிர்வாகிகள் தண்டபாணி, களைமாரன், பாலச்சந்தர், ஜீவா,கோகுல், சுந்தரமூர்த்தி, மின்துறை பொறுப்பாளர் ஆனந்த பாஸ்கர் உட்பட கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.