தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்டா மண்டல இளைஞரணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம், தஞ்சை மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜிகே வாசன் அவர்களால், டெல்டா மண்டல இளைஞரணி தலைவராக ஆர் .திருச்செந்தில் நியமிக்கப்பட்டார்.
இக்கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டெல்டா மண்டல நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களை நியமித்து, அறிமுக கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். சுரேஷ் மூப்பனார் தலைமை தாங்கினார்.தொடர்ந்து
புதிய நிர்வாகிகளுக்கு பதவி சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கி இளைஞரணிக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பி எல் ஏ சிதம்பரம்,, மத்திய மாவட்ட தலைவர் டி பி எஸ் வி கௌதமன், மாநில செயலாளர்கள் சிவ முரளிதரன், மதிவாணன், மாநில இணைச்செயலாளர்கள் ராம்மோகன், வடுவூர் கார்த்திகேயன், மண்டல மகளிரணி தலைவி கிருஷ்ணவேணி மதிவாணன், தொண்டரணி தலைவர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
புதிய மண்டல நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களை மண்டல இளைஞரணி தலைவர் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
டெல்டா மண்டல இளைஞரணி துணைதலைவர்களாக தீனதயாளன், வரதராஜன், விஜய்சங்கர், பாண்டியன், மண்டல பொதுச்செயலாளர்களாக.சிவகணேசன், சண்முகம், ஜோசப், சண்முகபிரபு, மண்டல செயலாளர்களாக ராமச்சந்திரன், பாலமுருகன், செல்வகுமார், ராஜீவ்காந்தி ஆகியோரும்,
மாவட்ட தலைவர்களாக ஜெகதீஸ் ( தஞ்சை மத்திய), செந்தில்குமார் தஞ்சை மேற்கு, ஆனந்தராஜ் தஞ்சை கிழக்கு, அரசக்குமார், அரியலூர் சுரேஷ், பெரம்பலூர் விக்னேஷ் தஞ்சை தெற்கு, திருப்பதி புதுக்கோட்டை வடக்கு, செந்தில்குமார் புதுக்கோட்டை கிழக்கு, சத்தியமூர்த்தி புதுக்கோட்டை தெற்கு, தனசேகர் திருச்சி மாநகர், ராஜேந்திரன் திருச்சி தெற்கு, மொட்டையாண்டி திருச்சி மேற்கு, சுகன் திருச்சி கிழக்கு, ரகுராமன் திருச்சி புறநகர், திருவாரூர் வடக்கு தமிழ் அரவிந்த், திருவாரூர் தெற்கு சங்கர், நாகை ரமேஷ், மயிலாடுதுறை கிழக்கு மண்கண்டன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
தொடர்ந்து பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கூட்டத்தில் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
முன்னதாக மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெகதீஷ்
வரவேற்றார். முடிவில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் தனசேகர் நன்றி கூறினார்.