மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் காலாப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில பொது செயலாளர் சந்திரமோகன் மற்றும் காலாப்பட்டு தொகுதி தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு பிரிவுகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மக்கள் நீதி மையத்தின் மாநில பொதுச் செயலாளர் அருணாசலம் உரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்..
புதுச்சேரியில் தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது வேலை வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. வேலையின்மையில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதன்மை மாநிலமாக உள்ளது.
புதுச்சேரியில் பொறியியல் படித்த 30 சதவீதமானவர்கள் வேலைவாய்ப்புக்காக தமிழகம் மற்றும் கர்நாடகாவை நோக்கி செல்கிறார்கள். புதுச்சேரியில் 15 சதவீத இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது மீதமுள்ள 65 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்காத இந்த அரசாங்கம் ,2026 ஆண்டும் தொடரக்கூடாது.
இந்த அரசாங்கத்தால் ஏற்படும் அவல நிலையை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் தமிழகத்தில் மாநில சுயாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்து வலு சேர்த்து வருகிறார்கள்.
தமிழக அரசு இந்தியாவிற்கே முன்னுதாரணமான ஒரு அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது அதே வேளையில் புதுச்சேரியில் மாநில அந்தஸ்துக்கே போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டசபையில் 16 முறை தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது இன்று வரை இதற்கு ஒன்றிய அரசு செவிசாய்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கப்பட்டு வந்த 80 சதவீதம் மானியம் தற்போது குறைக்கப்பட்டு 20% வழங்கப்பட்டு வருகிறது புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டுமென்றால் புதுச்சேரிக்கு நிச்சயம் மாநில அந்தஸ்து வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி பிரதமர் உள்துறை அமைச்சர் ஆளுநர் ஆகியோர் அனைவரும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு சட்டசபையை வெறும் பொம்மையாகவே அவர்கள் வைத்திருக்கிறார்கள் மாநில அரசாங்கத்தின் உரிமைகளை நீதிமன்றம் சென்று மீட்டெடுக்கக்கூடிய ஒரு வலுவான அரசாக தமிழக அரசு உள்ளது தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையில் முதன்மையாக இருக்கின்றோம். ஆனால் புதுச்சேரியில் மும்மொழிகொள்கை உதவியாளர் அரசாக உள்ளது.
2026 இதே நிலை தொடர்ந்தால் தொடர்ந்தால் புதுச்சேரி மக்களை யாராலையும் காப்பாற்ற முடியாது மக்களை கைவிட்ட இந்த அரசாங்கத்தை வருகின்ற தேர்தலில் பிஜேபி கூட்டணி அரசை மக்களே கைவிட போகிறார்கள்.
புதுச்சேரியில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 26 இடங்களை கைப்பற்றி அமோகமாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்த அவர் புதுச்சேரி ஆளும் பாஜக என் ஆர் காங்கிரஸ் கூட்டனி அரசு அதிகார போதையின் உச்சத்தில் உள்ளது இவர்களை மக்கள் கைவிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது ஆனால் அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை.
பாஜகவுடன் அதிமுக கை கோர்த்துள்ளதால் அவருடைய அடையாளங்கள் தெரியவந்துள்ளது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் அவர்களை எளிதில் புறக்கணிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேட்டி: அருணாசலம், மக்கள் நீதி மையம் பொதுச் செயலாளர்