அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஏ.எம்.எம். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாஜன சங்க தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், துணை தலைவர் தயாளன் ஆலோசகர் சேகர், ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பொருளாளர் சுந்தர், பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், முன்னாள் துணைச் சேர்மன் சங்கீதா மணிமாறன், அணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, தவசதீஷ், யோகேஷ், ராகுல், பாலகிருஷ்ணன், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதைப்போலவே தனியரசு பேரவை சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதிலும் மாவட்ட தலைவர் அழகாபுரிபார்த்திபன், செயலாளர்அய்யூர்தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திரமணியன், தலைமையில் மாவட்ட விவசாய அணி குமார், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், ஒன்றிய விவசாய அணி காமாட்சி, மக்கள் மூர்த்தி, மற்றும் ஜெகதீசன், உள்பட பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் சேது சீனிவாசன், எம்ஜிஆர் இளைஞரணி மாநில செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் துதி திருநாவுக்கரசு, அவைத் தலைவர் தனபால், ஒன்றிய செயலாளர்கள் ஜோதிமுருகன், தட்சணாமூர்த்தி, ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.