பாபநாசம் செய்தியாளர்
ஆர் .தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா …..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழக கிழக்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களின் நலன் கருதி கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணன், கிழக்கு மாவட்ட செயலாளர் நிஜாம், இணைச் செயலாளர் கழக பொருளாளர் சாகுல் ஹமீது,நகரச் செயலாளர் உதயசூரியா, நகர இணை செயலாளர் கரிகாலன்,நகர பொருளாளர் செல்லப்பா ஆகியோர் கலந்து கண்டு பொதுமக்களுக்கு. நீர்மோர் தர்பூசணி இளநீர் ஆகியவற்றை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.