மழை மலை மாதா அருள் தலத்தில் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள் திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை பாதை
வழிபாடு நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்ததை, ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஒரு வாரம் புனித வாரமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள் திருத்தளத்தில்
அருள்தள அதிபர் தந்தை அருள் முனைவர் சின்னப்பர் சிலுவையை சுமந்து சிலுவை
பாதை வழிபாடு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு புதுச்சேரி மற்றும் உள்ளூர் வெளியூர் வெளிநாடுகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.